[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

வங்கியில் வரிசையில் நின்ற விவசாயிகளை கொடூரமாக தாக்கிய போலீசார் ( வீடியோ)

akhilesh-yadav-suspends-sp-so-for-lathicharge-on-people-standing-in-bank-queue

வங்கியில் பணம் எடுப்பதற்காக வரிசையில் நின்ற விவசாயிகள் மீது தடியடி நடத்திய போலீஸ் அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் கிஷான்பூர் பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் பணம் எடுப்பதற்காக விவசாயிகள் பலர் வங்கிக்கு வெளியே வரிசையில் காத்திருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த போலீசார், வங்கியின் கிரில் கதவை அடைத்துவிட்டு அங்கு வரிசையில் நின்றிருந்த விவசாயிகளை லத்தியால் கடுமையாகத் தாக்கினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது . இதனைத் தொடர்ந்து இரண்டு போலீஸ் அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close