[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் கடும் சண்டை: ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு

two-soldiers-four-militants-killed-in-encounter-in-jammu-and-kashmir-s-kupwara

ஜம்மு, காஷ்மீர் மாநிலம் சௌக்கிபால் பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடந்த கடும் சண்டையில் ராணுவ வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் ஒரு ராணுவ அதிகாரி காயமடைந்துள்ளார். ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ‌5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு, காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் சௌக்கிபால் பகுதியில் உள்ள மார்செரி கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அந்த இடத்தை ராணுவம் நேற்று சுற்றிவளைத்தது. ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.

இதையடுத்து அந்த பகுதியை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பயங்கரவாதிகளை தேடும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த சண்டையில் காயமடைந்த மராட்டிய ரெஜிமெண்ட்டை சேர்ந்த சங்கர் ஷிண்டே, சிப்பாய் மோரே ஆகிய 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். அத்துடன் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close