[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

ஆந்திர சிறையிலிருந்து 22 தமிழர்கள் ஜாமீனில் விடுதலை

22-tamils-released-on-bail-at-andhira

ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக கைது செய்யப்பட்ட 22 தமிழர்கள் இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி ரேணிகுண்டாவில், செம்மரம் வெட்ட வந்ததாக கூறி 32 தமிழர்களை ஆந்திர காவல்துறை கைது செய்தது.

இவர்களுக்கு ஆதரவாக வாதாட வழக்கறிஞர்கள் முகமது ரியாஸ், அருள் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி, ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர். இருப்பினும் மனு தள்ளுபடியானது. இதையடுத்து, மேல்முறையீடு செய்தனர். இந்நிலையில், இந்த மனு திருப்பதி 5 வது அமர்வு நிதிமன்றத்தில் நீதிபதி விஜயா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 22 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி விஜயா உத்தரவிட்டார். இதையடுத்து சித்தூர் கிளைச் சிறையிலிருந்து 22 தமிழர்களும் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களில் 9 பேர் கடந்த 9 ஆம் தேதி விடுவிக்கப்பட்டனர்.

Advertisement:
Related Tags : Andhira redwood tamils tirupathi
Advertisement:
Advertisement:
[X] Close