[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து.
  • BREAKING-NEWS வேதாரண்யத்தில் இரண்டு தரப்பினரிடையே மோதல்: காவல்நிலையம் மீது கல்வீச்சு
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் கங்கையம்மன் கோயில் குளத்தில் கிடந்த மர்மப் பொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு.
  • BREAKING-NEWS தமிழகத்தில் எந்த விதத்திலும் தீவிரவாதம் தலைதூக்க முடியாது: ஜெயக்குமார்
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

மருத்துவமனையில் தீ விபத்து...மீட்புப் பணிகள் தீவிரம்

fire-broke-out-in-kolkatta-hospital

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. அங்கு மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையில் உள்ள ரொனால்ட் ராஸ் கட்டிடத்தின் 3-வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் 5 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்தனர். நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் உட்பட அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கப் போராடி, இறுதியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும் எந்த விதமான உயிர் சேதங்களும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

மருத்துவமனையின் 4-வது தளத்தில் தீ பிடித்ததாகவும் அது மெல்ல பரவியதாகவும் தவவல் வெளியாகியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close