[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

ர‌யில், நடைமேடையில் செல்ஃபி எடுக்கத் தடை... ரயில்வே காவல்துறை அதிரடி

selfie-images-strictly-banned-in-railway-stations

ரயில் பயணங்களின்போது, ரயில் வாயிற்கதவுகள் அருகே நின்றுகொண்டு செல்ஃபி எடுப்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே காவல்துறை எச்சரித்துள்ளது.

ரயில் நிலையங்களில் மற்றும் ரயில் பயணங்களின் போது பொதுமக்கள் செல்ஃபி எடுப்பதால் வருடத்திற்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரணங்கள் ஏற்படுவதாகவும் அதைத் தடுக்கும் வகையில் செல்ஃபி எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

பொதுமக்கள் ரயில் பயணங்களின் போது செல்ஃபி எடுத்து அதை பகிர்வு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் அதில் இருக்கும் ஆபத்துகளை அவர்கள் கண்டுகொள்வதில்லை. இதனால் பல விபத்துகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் உயிர் இழப்புகளும் நிகழ்கிறது. எனவே இதனை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் ரயில் பயணத்தின் போது செல்ஃபி எடுக்க முயன்ற பார்த்தசாரதி என்பவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close