[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன
  • BREAKING-NEWS ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்தார்
  • BREAKING-NEWS கேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: 4 மணி நேரத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக தகவல்
  • BREAKING-NEWS கோவாவில் மிக் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் இருவரும் பாதுகாப்பாக தப்பினர்
  • BREAKING-NEWS கனமழை காரணமாக நெல்லை நடுவக்குறிச்சி குளக்கரையில் பல இடங்களில் உடைப்பு

ரூ.10000 பெரும் மத்திய அரசு ஊழியர்கள்

central-govt-employees-gets-rs-10000

மத்திய அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளத்திலிருந்து ரூ.10000 முன்பணமாக வழங்க அறிவித்திருந்த நிலையில், இன்று முதல் வரும் 23-ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்ததால் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. மத்திய அரசு ஊழியர்கள், வங்கியில் பணம் இருந்தும், ஏ.டி.எம்.கள் செயல்படாததாலும், வங்கியில் பணம் எடுக்க முடியாமலும் அன்றாட செலவுகளுக்கே அவதிப்பட்டு வந்தனர். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு, ஊழியர்களுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாத சம்பளத்திலிருந்து ரூ.10,000 முன்பணமாக வழங்கப்படும் என்று கடந்த 17-ந் தேதி அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து பணத்தை இன்று முதல் 23-ஆம் தேதி வரை தங்களது அலுவலகங்களில் ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும், சென்னை கோட்டத்தில் உள்ள ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.10,000 ரொக்கமாக வழங்குவதற்காக ரிசர்வ் வங்கிகளிலிருந்து ரூ.10 கோடி கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close