[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

உத்தரப்பிரதேச ரயில் விபத்துக்கு மோடி, ராஜ்நாத் சிங் இரங்கல்

pm-modi-mourned-for-up-train-accident

உத்தரப்பிரதேச ரயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விபத்து தொடர்பாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுடன் பேசியதாகவும், மீட்புப் பணிகளை அவர் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். விபத்து நிகழ்விடத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புப்படையை அனுப்ப உத்தரவிட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்த உத்தரவிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார். விபத்து நிகழ்ந்த இடத்தில் ரயில்வே உயரதிகாரிகளும் அப்பகுதி எம்பி, எம்எல்ஏக்களும் மீட்பு பணிகளை கவனித்து வருவதாக அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close