[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்

ரூபாய் நோட்டு‌ ‌பற்றி‌ப் பேச நேரமில்லாத மோடி இசை நிகழ்ச்சியி‌ல் பங்கேற்கிறார்... காங்கிரஸ் விமர்சனம்

criticism-on-modi-about-currency-issue

ரூபாய் நோட்டு பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு நேரமில்லாத பிரதமர் நரேந்திர மோடி, இசை நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார் என்று, காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

500 மற்றும் 1000 ரூபாய் ஒழிப்பால் பொதுமக்கள் எதிர்கொண்டிருக்கும் இன்னல்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், மும்பையில் உலக குடிமக்கள் திருவிழாவில் பிரதமர் கலந்து கொண்டு பேசியதை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

ரூபாய் நோட்டு பிரச்னையால் 55 பேர் இறந்திருப்பதாகவும், லட்சக்கணக்கான மக்கள் வரிசையில் நிற்பதாகவும், பல கோடி பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறினார். இதுகுறித்தெல்லாம் நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு நேரமில்லாத பிரதமருக்கு, வீடியோ கான்பரசின்ங் மூலம் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று பேச நேரமிருக்கிறது என்று அவர் விமர்சித்த‌ர். இதுதான் கறுப்புப் பண ஒழிப்பிற்கு எதிரான வழியா என்றும் ரன்தீப் சுர்ஜிவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close