[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

இந்திரா காந்தியின் 100- வது பிறந்தநாள்..ஒரு வருடம் சிறப்பு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு

indira-gandhi-s-100th-birthday-congress-leaders-honor

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளான இந்திரா காந்தியின் 100- வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்தியாவின் மூன்றாவது பிரதமரான இந்திராகாந்தி, 1917-ஆம் ஆண்டு நவம்பர் 17-ந் தேதி பிறந்தார். இந்திராவின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை இன்று முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 19ம் தேதி வரை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்துள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 100ஆவது நாள் பிறந்தநாள் ‌விழா தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பாக சென்னையில் கொண்டாடப்பட்டது.

சென்னை யானைக்கவுனியில் உள்ள இந்திராகாந்தி திருவுருவச் சிலைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தங்கபாலு, குமரி அனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டெல்லியில் உள்ள இந்திரா நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி , காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் ராகுல்காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தமிழ்நாட்டில் இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்கு விழாக்குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close