[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு

நெல்லித்தோப்பில் அதிமுகவினரின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு..!

admk-team-protest-in-pondycherry

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் வாக்குச்சாவடிக்கு வெளியே அதிமுகவினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள பிரதான ஜிப்மர் சாலையில் அதிமுகவினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலையில் 4 வாக்குச்சாவடிகள் அமைக்கபட்டுள்ளது. பல்வேறு வாக்குச்சாவடிகளில் காங்கிரஸ் மற்றும் திமுகவினர் சார்பில் வெளியூர் நபர்கள் வாக்குச்சாவடிகளில் வாக்கு சேகரித்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து அதிமுக.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக, அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அதனை படம் பிடிக்கச்சென்ற செய்தியாளர்கள் மற்றும் போலிசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பதற்றமான சூழ்நிலை நிழவி வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close