[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

நாட்டிலேயே முதல் முறையாக நெல்லித்தொப்புத் தொகுதியில் ஆன்லைன் வாக்குப்பதிவு அறிமுகம்

pondycherry-nellithopu-introducing-online-polling-system

நாட்டிலேயே முதன்முறையாக நெல்லித் தோப்பு தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் வாக்களிக்க ஆன்லைன் வாக்குப்பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி, நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் வி.நாராயணசாமி, அதிமுக சார்பில் ஓம்சக்திசேகர், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ஆறுமுகம் (எ) சரவணனும், நாம் தமிழர் கட்சி சார்பில் ரவி அண்ணாமலை மற்றும் 4 சுயேச்சைகள் உள்பட 8 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு 26 வாக்குச்சாவடிகளில் தொடங்கியது. வாக்குபதிவு தொடங்கியது முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். 8 மணி நிலவரப்படி 11 சதவிகித வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளன. நாட்டிலேயே முதன்முறையாக நெல்லித்தோப்பு தொகுதியில் தபால் ஓட்டுக்களுக்கு பதிலாக ஆன்லைன் வாக்குகள் அறிமுகம் படுத்தப்பட்டுள்ளன. நெல்லித்தோப்பு தொகுதியைச் சேர்ந்த ராணுவத்தினர், தேர்தல் பணியில் உள்ள அரசு அதிகாரிகள் ஆன்லைன் மூலம் வாக்குகளை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:

[X] Close