[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

வங்கிகளில் 'மை' வைக்கப்படுவது தேர்தல் நடைமுறைகளை பாதிக்ககூடாது: தேர்தல் ஆணையம் கடிதம்

election-commission-writes-to-finance-ministry-not-to-use-indelible-ink-in-banks

வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்றிக்கொள்பவர்கள் விரலில் அழியாத மை வைக்கும் நடவடிக்கை சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடக்கும் தேர்தல்களை எந்தவகையிலும் பாதிக்காமல் இருப்பது அவசியம் என தேர்தல் ஆணையம், நிதியமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் மூத்த முதன்மைச் செயலாளர் ஆர்.கே. ஸ்ரீவஸ்‌தவா பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்தி காந்த தாஸுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் தேர்தல் நடைமுறை விதிகள் பிரிவு 49 K-வின்படி தேர்தலில் வாக்களிக்கும் ஒவ்வொருவருக்கும் இடது கை ஆட்காட்டிவிரலில் அழியாத மை வைக்கப்படவேண்டும் என கூறப்பட்டிருப்பதை சுட்‌டிக்காட்டியுள்ளார். இதே பிரிவின் 4-வது உட்பிரிவின்படி ஒருவருக்கு இடது கையில் ஆட்காட்டி விரல் இல்லாத பட்சத்தில் இடது கையில் ஏதாவது ஒரு விரலில் மை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். அதே ஒருவருக்கு இடது கையில் ஐந்து விரல்களும் இல்லாவிட்டால் வலது கை ஆட்காட்டி விரலில் மை வைக்கப்படவேண்டும் என்றும் விதியில் கூறப்பட்டிருப்பதாக ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.

தற்போது தேர்தல் நடைபெற்று வரும் தொகுதிகள் மற்றும் எதிர்வரும் சட்டமன்றத்தேர்தல் ஆகியவற்றில் இந்த விதியை கவனத்தில் கொள்வது அவசியம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. செல்லாத பணத்தை மாற்றிக்கொள்பவர்களின் விரல்களில் அழியாத மை வைக்கும் முடிவு தேர்தல் நடவடிக்கையை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் இருப்பதை உறுதிசெய்வது அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close