[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தி.மலையில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய சிறப்புக்குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா

பணம் எடுப்பதற்காக வங்கி முன் இரவு முதலே தூங்காமல் காத்திருக்கும் மக்கள்..!

people-gather-in-the-night-outside-bank-of-india

வங்கியில் பணம் எடுப்பதற்காக இரவிலிருந்தே பொதுமக்கள் வரிசையில் காத்து இருக்கும் சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதனையடுத்து புதிய நோட்டுகளை பெறுவதற்கும் தங்களிடம் உள்ள பழைய செல்லாத நோட்டுகளை மாற்றுவதற்கும் வங்கிகளில் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தங்களது வங்கிக் கணக்கில் பணம் இருந்தும் கூட அதனை பெற முடியாமல், அன்றாட செலவிற்கே போதிய பணம் இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் வங்கியில் பணம் எடுப்பதற்காக முந்தைய நாள் இரவு முதலே வங்கி முன் வரிசை அமைத்து மக்கள் காத்து இருக்கும் சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது. மும்பையின் ஜவேரி பகுதியில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியா முன்பு நேற்றிரவு திரண்ட பொதுமக்கள் வரிசை அமைத்து அங்கேயே துங்காமல் காத்து இருக்கின்றனர். நாடு முழுவதிலும் சில்லறை தட்டுப்பாடு நிலவி வருவதால், அன்றாட வாழ்க்கையை சமாளிக்க பணம் எடுக்க முடியாமலேயே இரவு முழுக்க வங்கி முன் காத்திருந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close