[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

இனி பெட்ரோல் பங்க்குகளில் இருந்தும் ரூ.2000 வரை பணம் பெறலாம்..!

as-demonetisation-woes-spill-over-petrol-pumps-to-provide-rs-2000-a-day

டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி பெட்ரோல் பங்க்குகளில் நாளொன்றுக்கு ரூ.2000 பெற்றுக்கொள்ளும் வசதியை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகம் செய்துள்ளது.

ரூ.500. ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடியின் அறிவிப்பை அடுத்து நாட்டில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கிகள் முன் குவிந்து வருகிறார்கள். இதேபோல் தங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை பெறுவதற்கு வங்கிகள் முன்பாகவும் ஏடிஎம்கள் முன்பாகவும் மக்கள் குவிந்து வருகின்றனர். தனிநபர், ஒரு டெபிட் கார்ட் மூலம் ஒரு நாளைக்கு ரூ.2000 மட்டுமே ஏடிஎம்களில் எடுக்க முடியும். பல ஏடிஎம்களில் போதிய பணம் இல்லாததால் மக்கள் அன்றாட செலவுகளுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் நீடிக்கும் கூட்டநெரிசலை தவிர்க்கும் விதமாக பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் பங்க்குகளில் பொதுமக்கள் தங்களின் டெபிட் கார்டுகளைப் ஸ்வைப் செய்து நாளொன்றுக்கு 2000 ரூபாய் வரை பெற்றுக் கொள்ளலாம். பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில்,பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த சேவையை வழங்க பாரத ஸ்டேட் வங்கி முன்வந்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் ஸ்வைப்பிங் மெஷின் வசதிகொண்ட 2500 பெட்ரோல் பங்க்குகளில் முதற்கட்டமாக இந்த வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து, மற்ற வங்கிகளுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைக்குப் பிறகு 20 ஆயிரம் பெட்ரோல் பங்க்க்குகளுக்கு பணம் எடுக்கும் ‌வசதி விரிவுப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close