[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்

மருத்துவமனை அலட்சியம்..நோயாளி கணவனை தர தரவென்று இழுத்துச்சென்ற மனைவி

at-andhra-hospital-wife-had-to-drag-him-behind-her-up-a-ramp

ஆந்திர அரசு மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்ட ஒருவரை முதல் மாடிக்கு அழைத்துச் செல்ல ஸ்ட்ரெச்சர் மறுக்கப்பட்டதால், அவரது மனைவி இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட தனது கணவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனந்த்பூர் அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீவாணி என்பவர் வந்துள்ளார். மருத்துவமனையின் முதல் மாடிக்கு அவரை அழைத்துச்செல்ல ஸ்ட்ரெச்சர் எனப்படும் நோயாளிகள் வாகனத்தை அளிக்க நிர்வாகம் தரப்பில் மறுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனால், வேறுவழியில்லாமல் உடல்நிலை சரியில்லாமல் நடக்க முடியாதநிலையில் இருந்த தனது கணவரின் கைகளைப் பிடித்து அவர் இழுத்துச் சென்றுள்ளார். நோயாளிகள் வாகனம் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள பாதை வழியாக ஸ்ரீவாணி தனது கணவரை இழுத்துச் செல்வது போன்ற வீடியோக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகி மல்லிகார்ஜுன ரெட்டி தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close