[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க வீரரை இடித்த விவகாரத்தில் விராட் கோலிக்கு ஐசிசி கண்டனம்
  • BREAKING-NEWS சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு
  • BREAKING-NEWS கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

மாநிலங்களவையில் காவிரி விவகாரத்தை எழுப்பிய அதிமுக

admk-mp-s-uproar-at-rajya-sabha

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

ரூ.500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என கடந்த 8 ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இது குறித்து பல விமர்சனங்களை எதிர் கட்சிகள் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதுமே காங்கிரஸ் உறுப்பினர்கள் செல்லா நோட்டு விவகாரம் கேள்வி எழுப்பினர்.

இதனிடையே இரண்டாவது நாளான இன்று அவை தொடங்கியதும், அதிமுக உறுப்பினர்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவை துணைத் தலைவர் குரியனின் இருக்கையை முற்றுகையிட்டு, முழக்கமிட்டனர். இதனால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. 11.30 மணிக்கு அவை மீண்டும் கூடியபோது, இதேகோரிக்கையை வலியுறுத்தி அதிமுக உறுப்பினர்கள் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல், ரூபாய் பிரச்னை விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்கக் கோரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாநிலங்கள் அவை நாளைவரை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, மாநிலளங்களவையைப் போல், மக்களவையிலும் ரூபாய் பிரச்னையால் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close