[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு
  • BREAKING-NEWS சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

அனைத்து ஏடிஎம்-களிலும் புதிய நோட்டுகள் கிடைப்பது எப்போது?

demonetisation-12-500-atms-being-recalibrated-every-day-to-deliver-new-notes

ஏடிஎம்-கள் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை விநியோகம் செய்யும் வகையில் அதன் அளவுத்திருத்த பணிகளை தொழில்நுட்பக் குழுவினர் செய்து வருகின்றனர். நாள்தோறும் 12,500 ஏடிஎம்-களில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில் நாடெங்கும் உள்ள அனைத்து ஏடிஎம்-களில் இப்பணிகள் முடிய 2 வாரங்கள் ஆகும் எனத் தெரிகிறது.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பெரும்பாலான ஏடிஎம்-களில் 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வருகிறது. ஒரு சில ஏடிஎம்-கள் இன்றுவரை செயல்படவில்லை.

இதனால் பணத் தட்டுப்பாட்டை விரைவில் போக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அனைத்து ஏடிஎம்-களும் ஏற்கும் வகையில் அதன் வன்பொருள் மற்றும் மென்பொருளை தொழில்நுட்பக் குழுவினர் மாற்றி அமைத்து வருகின்றனர். நாள் தோறும் 12,500 ஏடிஎம்-களில் இந்த பணிகளை தொழில்நுட்பக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பணியை ஒரு ஏடிஎம்-மில் செய்ய கிட்டத்தட்ட 3 முதல் 4 மணி நேரம் ஆகும். நாடு முழுவதிலும் உள்ள 2 லட்சம் ஏடிஎம்-களில் இந்தப் பணிகளில் இன்னும் 2 வாரத்தில் முடிவடையும் எனத் தெரிகிறது. இந்தப் பணிகள் முடிவடையும் பட்சத்தில் மக்கள் வழக்கம்போல புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்-களில் எளிமையாக பெற முடியும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close