[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

ஏடிஎம் சேவை எப்போது சீராகும்?... புதிய தகவல்

demonetisation-half-of-atms-to-be-recalibrated-by-next-week-to-dispense-new-rs-500-rs-2000-notes

நாடு முழுவதுமுள்ள 2 லட்சம் ஏடிஎம்களில் பாதி இயந்திரங்கள் அடுத்த வாரத்துக்குள் புதிய ரூபாய் நோட்டுகளை வழங்கும் வகையில் மாற்றியமைக்கப்படும் என்று நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரூபாய் நோட்டு விவகாரத்தால் வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களை நோக்கி மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். மேலும், மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய 500 ரூபாய் நோட்டுகள் நாட்டின் பெரும்பாலான இடங்களில் கிடைப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பேசிய நிதியமைச்சக அதிகாரி ஒருவர், புதிய 500 ரூபாய் நோட்டுகள் போதுமான அளவு அச்சிடப்பட்டுள்ளதால், அடுத்த ஒருவாரத்துக்குள் பாதியளவு ஏடிஎம்கள் தயார் செய்யப்பட்டு விடும் என்று தெரிவித்தார். ஏடிஎம்கள் மூலம் நபர் ஒருவர் எடுக்கும் அதிகபட்ச தொகை 2,000 ரூபாயிலிருந்து, ரூ.2,500ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான ஏடிஎம்களில் ரூ.2,000 அளவுக்கே பணம் கிடைப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஏடிஎம் இயந்திரங்களை புதிய ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க 2 முதல் 4 வாரங்கள் காலம் பிடிக்கலாம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close