[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

ஹிட்லர், கடாஃபி, முசோலினி வரிசையில் பிரதமர் மோடி...காங்கிரஸ் விமர்சனம்

after-gaddafi-hitler-mussolini-comes-our-pm-modi-says-congress

ஹிட்லர், கடாஃபி, முசோலினி உள்ளிட்ட சர்வாதிகள் வரிசையில் பிரதமர் மோடி இருப்பதாக காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

ஆளும் பாஜக கூட்டணி அரசின் செல்லக்காசு அறிவிப்பை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்தசூழலில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிய பின்னர், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

எதிர்கட்சிகளின் கை ஓங்கியுள்ள மாநிலங்களவையில் செல்லாக்காசு பிரச்னை குறித்த விவாதத்துடன் அவை நடவடிக்கைகள் தொடங்கின. விவாதத்தைத் தொடங்கிவைத்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் ஷர்மா, அரசின் முடிவைக் கடுமையாக விமர்சித்தார். மேலும், நாட்டில் புழக்கத்தில் உள்ள 86 சதவிகித பணம் 500 மற்றும் 1,000 நோட்டுகள் தான் என்றும் அவற்றை ஒரே அறிவிப்பின் மூலம் அரசு செல்லாது என அறிவித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். இவை அனைத்துமே கறுப்பு பணமா என கேள்வி எழுப்பிய அவர், சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் பதுக்கியுள்ளவர்களின் பட்டியல் மத்திய அரசிடம் இருக்கும் போது,யாரெல்லாம் பணம் பதுக்கியுள்ளனர் என்பதை பிரதமர் மோடி வெளியிடலாமே என கேட்டுக் கொண்டார்.

கோவாவில் சாமான்ய மக்களை இழிவு படுத்தும் வகையில் பேசிய பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆனந்த ஷர்மா விமர்சனங்களுக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பிரதமர் மோடியின் இந்த முடிவை பெரும்பாலான மக்கள் வரவேற்றுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இந்த நடவடிக்கையால் கருப்புப்பணம் வைத்துள்ளவர்களே பெரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் அவர் கூறினார். வெளிநாடுகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் பட்டியல் அரசிடம் இருப்பதாகக் குறிப்பிட்ட பியூஷ் கோயல், அந்தந்த நாடுகளுடன் போடப்பட்ட ரகசியம் காக்கப்படும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெயர்களை வெளியிட முடியவில்லை என்று குறிப்பிட்டார்.

பிரதமரை அழைக்க வேண்டும் - மாயாவதி:

ரூபாய் நோட்டு செல்லாது என்ற முக்கியமான முடிவை பிரதமர் மோடி எடுத்துள்ளார். இந்த பிரச்னையின் முக்கியத்துவம் கருதி விவாதத்தின் போது அவையில் பிரதமரும் இருக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ்கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தினார். இந்த அறிவிப்புக்காக 10 மாத காலம் எடுத்துக் கொண்ட பாஜக அரசு, இந்த காலத்தில் தொழில்துறையைச் சேர்ந்த தனது நண்பர்களுக்கு பாஜக உதவியதாகக் குற்றம்சாட்டினார்.

புதிய 2,000 ரூபாய் நோட்டும், சமாஜ்வாதிக் கட்சியின் கேள்வியும்:

புதிதாக 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தலாம் என்ற யோசனையை அரசுக்கு யார் கொடுத்தது என்று சமாஜ்வாதிக் கட்சி எம்பி ராம்கோபால் யாதவ் கேள்வி எழுப்பினார். இதனால் விவசாயிகள், தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அவர்களில் பலர் சில்லறை தட்டுப்பாட்டால் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

கிராமப்புற மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் - அதிமுக:

மத்திய அரசு 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால், கிராமப்புற மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக, மாநிலங்களவையில் அ.தி.மு.க கருத்து தெரிவித்தது.‌ தங்களிடம் இருக்கும் சிறிய தொகையை மாற்றுவதற்காக வங்கிகளில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருப்பதாகவும், மக்கள் பாதிக்கப்படாதவாறு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க வலியுறுத்தியது.

ஆறு சதவீத கருப்புப் பணம் மட்டுமே ரொக்கமாக இருக்கிறது - சீத்தாரம் யெச்சூரி

கருப்புப்பணத்தை ஒழிக்க நாம் நினைக்கிறோம். ஆனால், உலக வங்கி அறிக்கையின் படி இந்திய பொருளாதாரத்தின் 21 சதவீத பொருளாதாரம் கருப்பு பணம் மூலமே இயங்குகிறது என்று தெரிவித்தார். ஒரு அறிக்கையின் படி மொத்த கருப்புப்பணத்தில் 6 சதவீதம் மட்டுமே ரொக்கமாக இருப்பதாகவும் யெச்சூரி பேசினார்.

ஹிட்லர், கடாஃபி வரிசையில் பிரதமர் மோடி - காங்கிரஸ்

பிரதமர் மோடியின் இன்றைய ஆட்சி ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர், இத்தாலியின் முசோலினி மற்றும் லிபியாவின் கடாஃபி ஆகியோரை நினைவுபடுத்துவதாக காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி விமர்சித்தார்.அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், திவாரியின் பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை.

உலகின் மிகச்சிறந்த தலைவர் மோடி - வெங்கய்ய நாயுடு:

ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக குற்றம்சாட்டும் காங்கிரஸ் கட்சி, 2019ம் ஆண்டு நடக்கும் தேர்தலை மனதில் வைத்தே செயல்படுவதாக அமைச்சர் வெங்கய்ய நாயுடு குற்றம்சாட்டினார். உலகின் மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவராக பிரதமர் மோடி திகழ்வதாகவும் அவர் பாராட்டினார்.

நாளைய விவாதத்தின் போது பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் என்று காங்கிரஸின் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தினார். இந்தநிலையில், மக்களவையில் ரூபாய்நோட்டு விவகாரம் குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவாதத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close