[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

வங்கிகளில் வரிசையில் நிற்கும் சாமானியன்...ரூ.650 கோடி செலவில் திருமண விழா நடத்தும் பாஜக தலைவர்

g-janardhana-reddy-s-spending-on-daughter-s-big-fat-wedding-comes-under-i-t-scanner

கர்நாடக பாஜக தலைவர் ஜனார்த்தனன் ரெட்டி, தனது மகளின் திருமணத்துக்காக ரூ.650 கோடி செலவு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கர்நாடகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தொழிலதிபருமான ஜனார்த்தன ரெட்டி, சுரங்க ஊழல் வழக்கில் சிக்கி சிறை சென்று திரும்பியவர். இவர் தனது மகள் பிராமனி-ராஜீவ் ரெட்டி திருமணத்துக்காக பெங்களூரு புறநகர் பகுதியிலுள்ள பேலஸ் கிரவுண்ட் பகுதியில் பிரமாண்ட அரங்கு ஒன்றினை அமைத்துள்ளார். மிகப்பெரிய படப்பிடிப்பு தளம் போன்று அமைக்கப்பட்டுள்ள அந்த பந்தலில், ஜனார்த்தனன் ரெட்டியின் வீடு, ஹம்பியில் உள்ள கோவில் மற்றும் அவருக்கு சொந்தமான பள்ளி ஆகியவற்றின் மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த திருமணத்துக்கு வரும் பெரும் புள்ளிகளுக்கு பான் மாசாலா வகைகளை வழங்குவதற்காக மட்டுமே ரூ.25 கோடியை ரெட்டி குடும்பத்தினர் செலவிட்டதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. மேலும், 3,000-த்துக்கும் மேற்பட்ட தனியார் பாதுகாவலர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் திருமணத்துக்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக சாமானிய மக்கள் வங்கிகளின் வாசலில் காத்துக் கிடக்கும் இந்தசூழலில் தனது மகள் திருமணத்தை இவ்வளவு ஆடம்பரமாக நடத்த ஜனார்த்தன ரெட்டிக்கு பணம் எங்கிருந்து கிடைத்தது என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர்.

ஜனார்த்தனன் ரெட்டி மகளது திருமணத்துக்கு ரூ.650 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாக பெங்களூருவைச் சேர்ந்த வழக்கறிஞர் நரசிம்ம மூர்த்தி வருமானவரித்துறையில் புகார் அளித்துள்ளார். நரசிம்மமூர்த்தி அளித்துள்ள 4 பக்க புகாரில், சட்டவிரோதமான சுரங்க ஊழலில் சிறையிலடைக்கப்பட்ட ரெட்டி, கடந்த 2015-ல் ஜாமீனில் வெளிவந்தார். ரெட்டி மற்றும் அவரது மனைவிக்குச் சொந்தமான ரூ.70 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமானவரித்துறை முடக்கியது. இந்த சூழலில் தனது மகள் திருமணத்துக்கு செலவு செய்ய அவருக்கு பணம் எங்கிருந்து வந்தது என்பதை விரிவாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ரூ.2.5 லட்சத்துக்கு மேல் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்படும் பணம் குறித்து அரசு ஆய்வு நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், கோடிகளில் செலவழித்து ரெட்டி குடும்பத்தினர் எல்சிடி ஸ்க்ரீனுடன் கூடிய அழைப்பிதழை அனுப்பியதையும் நரசிம்மமூர்த்தி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த விசாரணையின் போது ரெட்டி குடும்பத்தின் திருமண ஏற்பாடுகள் தொடர்பாக பல்வேறு பத்திரிகைகளில் வந்துள்ள தகவல்களையும் நரசிம்மமூர்த்தி குறிப்பிட்டதாகாவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தங்கச்சுரங்கள் வைத்துள்ள ரஜீவ் ரெட்டிக்கும், ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிராமனிக்கு பெங்களூருவில் உள்ள பேலஸ் கிரவுண்ட் மைதானத்தில் இன்று திருமணம் நடக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close