[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

கறுப்பு பணம் பதுக்கியவர்களின் பட்டியலை பிரதமர் வெளியிட வேண்டும்: ஆனந்த் சர்மா

anand-sharma-demad-pm-modi-release-black-money-hoarders

சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கியவர்களின் பட்டியலை பிரதமர் மோடி வெளியிட வேண்டும் என காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா மாநிலங்களவையில் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று மாநிலங்களவையில் பழைய 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்ற அரசின் அறிவிப்பு மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா, நாட்டில் புழக்கத்தில் உள்ள 86 சதவிகித பணம் 500 மற்றும் 1000 நோட்டுகள் தான் என்றும் அவற்றை ஒரே அறிவிப்பின் மூலம் அரசு செல்லாது என அறிவித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

இவை அனைத்துமே கறுப்பு பணமா என கேள்வி எழுப்பிய அவர், சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் பதுக்கியுள்ளவர்களின் பட்டியல் மத்திய அரசிடம் இருக்கும் போது ,யாரெல்லாம் பணம் பதுக்கியுள்ளனர் என்பதை பிரதமர் மோடி வெளியிடலாமே என கேட்டுக் கொண்டார். கோவாவில் சாமான்ய மக்களை இழிவு படுத்தும் வகையில் பேசிய பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கறுப்பு பணத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் பாரதிய ஜனதா-வினர் கோடிக்கணக்கில் செலவு செய்யும் கர்நாடக பாரதிய ஜனதா மூத்த தலைவர் ஜனார்த்தன ரெட்டியின் இல்ல திருமணத்திற்கு ஏன் செல்கின்றனர்? அவர்களை ஏன் கைது செய்யவில்லை எனவும் ஆனந்த் சர்மா கேள்வி எழுப்பினார். மக்களுக்கு உணவளிக்கும் விவசாயி வைத்திருக்கும் பணம் கறுப்பு பணமா என வினவிய ஆனந்த் சர்மா, அனைத்து விவசாயிகளும் கிரிடிட் கார்டு வைத்துள்ளனரா என்றும் கேள்வி எழுப்பினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close