[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

வங்கியில் பணம் மாற்ற வருவோருக்கு 'மை' வைக்கும் முறை தொடங்கியது

use-of-indelible-ink-on-right-index-finger-of-customers-begins

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் வங்கியில் பழைய பணம் மாற்ற வருவோருக்கு விரலில் மை வைக்கப்பட்டு பணம் வழங்கப்படுகிறது.

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் அளித்து புதிய நோட்டுகளை மாற்றுவோரின் கை விரலில் மை வைக்கப்படும் என மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்த தாஸ் நேற்று அறிவித்தார். கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்போர் குழுக்களாக சில நபர்களை நியமித்து தங்கள் பணத்தை பல்வேறு வங்கிகளில் தொடர்ந்து மாற்றி வருவதாகக் கிடைத்த தகவலை அடுத்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில் வங்கிகளில் பணம் மாற்ற வருவோருக்கு மை வைக்கும் முறை வட மாநில வங்கிகளில் தொடங்கி உள்ளது. இதன்படி டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மை வைக்கப்பட்ட பின்னரே பணம் மாற்றித் தரப்படுகிறது. தேர்தல் நடைபெறாத இடங்களில் இடது கை ஆள்காட்டி விரலிலும், தேர்தல் நடைபெறும் இடங்களில் வலது கை ஆள் காட்டி விரலிலும் மை வைக்கப்படுகிறது.

இதனிடையே, தமிழகத்திற்கு மை வருவதற்கு ஓரிரு நாட்கள் ஆகும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கிகள் தன்னிச்சையாக மை வாங்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close