[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே
  • BREAKING-NEWS “நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”- தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
  • BREAKING-NEWS பொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் - தமிழக அரசு

ரூபாய் நோட்டு விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு ஒத்துழையுங்கள்: மோடி வேண்டுகோள்

pm-modi-appeals-to-opposition-ahead-of-parliament-session-let-s-debate-in-national-interest

பழைய ரூபாய் நோட்டு விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்களை ‌நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று எம்.பி.க்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி அறிவித்தார். இதன் காரணமாக 100 ரூபாய் நோட்டுகளுக்கு திடீரென தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்கிடையில் நாடு முழுவதும் கடந்த 10ம் தேதி 2000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் 500 ரூபாய் நோட்டு நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு இன்னும் வரவில்லை. இதனால், சில்லறை மாற்றுவதற்கு பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டுள்ளன. இந்த பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்நிலையில் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்குவதற்கு முன்பு பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘மக்களிடம் நல்ல திட்டங்களை கொண்டு சேர்க்க அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள். ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். நல்ல‌ விவாதங்களை எதிர்பார்க்கிறோம். மக்களுக்கு நல்லதை கொண்டு சேர்க்க அனைவரின் ஓத்துழைப்பு தேவை. இந்த ‌‌நடவடிக்கையால் சாமான்யர்கள் சந்தித்த பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். நாடாளுமன்றத்தில் விவாதங்களில் அனைவரும் பங்கேற்று, மக்களுக்கு நன்மை அளிக்கும் புதிய யோசனைகளையும் தெரிவியுங்கள்’ என்றார். இந்நிலையில் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close