[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

செல்லாத நோட்டுகள் குறித்து இதுவரை வெளியிடப்பட்ட அறிவிப்புகள்

demonitisation-latest-developements

கருப்புப்பணத்தை ஒழிப்பதற்காகவும், கள்ளநோட்டுகள் புழக்கத்தைத் தடுப்பதற்காகவும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி வெளியிட்டார். அவரது அறிவிப்பைத் தொடர்ந்து வெளிவந்த அரசின் முக்க்கிய அறிவிப்புகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

* பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் நவம்பர் 10 முதல் டிசம்பர் 30 வரை மக்கள் டெபாசிட் செய்து கொள்ளலாம்.

*பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் உடனடியாகவும், விரைவில் புதிய 1,000 ரூபாய் நோட்டுகளும் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல புதிய 100, 50, 20, 10 என அனைத்து வகையான நோட்டுகளும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

* இந்த அறிவிப்பினால் புதிய ரூபாய் நோட்டுகளை கொண்டு செல்லும் பொருட்டு நாடு முழுவதுமுள்ள வங்கிகள் நவம்பர் 9 அன்று ஒருநாள் மட்டும் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டது. மேலும், வங்கி ஏடிஎம் இயந்திரங்கள் நவம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் செயல்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

* வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து கொள்ள அடையாள அட்டையுடன், விண்ணப்பம் ஒன்றையும் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

* இந்த அறிவிப்பினால் இணைய வழி பணபரிமாற்றங்கள், செக் மற்றும் காசோலை பணபரிமாற்றங்கள் வழக்கம்போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.

* பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ருபாய் நோட்டுகளை வங்கி மற்றும் அஞ்சலகங்கள் கொடுத்து தினசரி ரூ.4,000 வரை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த உச்சவரம்பு ரூ.4,500ஆக அதிகரிக்கப்பட்டது. இதேபோல ஏடிஎம்களில் தினசரி ரூ.2,000 வரை எடுக்கலாம் என்றும், பின்னர் இந்த தொகை ரூ.2,500ஆகவும் அதிகரிக்கப்பட்டது.

* பொதுமக்கள் வசதிக்காக நவம்பர் 12 சனிக்கிழமை மற்றும் நவம்பர் 13 ஞாயிற்றுக்கிழமை என 2 விடுமுறை நாட்களிலும் வங்கிகள் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.

* வங்கிக் கணக்கில் ரூ.2.5 லட்சம் வரை டெபாசிட் செய்யப்படும் தொகை கண்காணிக்கப்படாது என்றும், அதற்கு மேல் செய்யப்படும் தொகை குறித்து அரசு ஆய்வு நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதேபோல சட்டத்துக்குப் புறம்பான வகையில் சேர்க்கப்படும் பணத்துக்கு அதிகபட்சமாக 200 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது.

* பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்குகள், இடுகாடுகள், வரி செலுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் நவம்பர் 24 வரை பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

* சில்லறை தட்டுப்பாடால் நாடு முழுவதுமுள்ள நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் நவம்பர் 18 வரையும், விமானநிலைய பார்க்கிங் கட்டணம் நவம்பர் 24 வரையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

* வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏடிஎம் மையங்களில் மேற்கொள்ளும் அனைத்து பரிமாற்றங்களுக்கான சேவைக்கட்டணம் டிசம்பர் 30 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

*வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்கு கைவிரலில் அடையாள மை வைக்கப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close