[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு
  • BREAKING-NEWS சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

ஏ.டி.எம்.களில் புதிய 500 ரூபாய் நோட்டுகள்!

new-500-rupees-in-bank-atm-s

இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டைத் தொடர்ந்து புதிய 500 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்திற்கு வந்துள்ளன. தலைநகர் டெல்லியில், ஏடிஎம்களில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கின்றன.

நாடு முழுவதும் வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்கின்றனர். ஏ.டி.எம்.களில் நிரப்பப்படும் 100 ரூபாய் நோட்டுகள் சில மணி நேரங்களிலேயே தீர்ந்து விடுகின்றன. வங்கிகளில் வழங்கப்படும் 2000 ரூபாய் நோட்டுகளுக்கு சில்லறை கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டனர். இந்த நிலையில், டெல்லியில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்ததால் மக்களுக்கு சற்று நிம்மதியை தந்துள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மட்டும் பெற்று சில்லறைக்கு சிரமத்தை எதிர்க்கொண்டு வந்த மக்கள் புதிய 500 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்களில் வரதொடங்கியதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏடி.எம்களில் புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற வசதியாக தொழில்நுட்ப மாற்றங்களை செய்ய ரிசர்வ் வங்கி துணை கவர்னர் எஸ்.எஸ்.முந்த்ரா தலைமையில் சிறப்புப் படை ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close