[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

செல்லாக்காசு விவகாரம்.. இன்றைய நிலவரம் என்ன..?!

10-points-that-shows-you-what-happened-after-cancelling-of-rupee-notes

1. பெட்ரோல்‌ ப‌ங்க்குகள், சுங்க‌ச்சா‌வடிகள், ரயில் ‌‌நிலையங்‌களில் பழைய ‌‌5‌00 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டு‌களை நவம்பர் 24ம் தேதி வரை செலுத்தலாம்.

2. மத்திய அரசு புதிய ரூ.500 நோட்டுகளை ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியிட்டுள்ளதால் வங்கிகளில் பணம் எடுப்பது மற்றும் சந்தையில் பணப்புழக்கம் எளிதாக நடைபெறும் என பொதுமக்கள் நம்பலாம்.

3. ஒருவர் ஏடிஎம்மில் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே பணம் எடுக்கலாம் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டு ஒரு நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

4. இணையதள வழி பணப்பரிமாற்றங்களுக்கான கட்டணங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

5. நவம்பர் 24ம் தேதி வரை மருந்தகங்களில் மருந்துகள் வாங்க பழைய நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம். அதே நேரம் மருத்துவமனைகளில் முன்பணம் செலுத்த பழைய நோட்டுகளை பயன்படுத்த முடியாது.

6. வணிகர்கள் மற்றும் நடப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கி கணக்குகளில் இருந்து வாரத்துக்கு அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

7. குரு நானக் பிறந்த நாளையொட்டி பல வங்கிகள் இன்று மூடப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பல வங்கிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

8. ஏடிஎம்களில் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை எடுக்கும் வகையில் தொழில்நுட்பம் மாற்றப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் அனைத்து ஏடிஎம்களில் இருந்தும் 2000 ரூபாய் நோட்டு எடுக்கலாம்.

9. அனைத்து வங்கி ஊழியர்களும் இரவு வரை கடுமையாக பணியாற்றி வருகின்றனர்.

10. எஸ்பிஐ வங்கி சில ஊர்களில் மட்டும் வாடிக்கையாளர்கள் மருந்தகங்களில் பணம் மாற்றிக்கொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : 10pointsBankAtm2000rs note 2000rs note atm bank bank employee
Advertisement:
Advertisement:
[X] Close