[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

நவம்பர் 18 வரை சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்தத் தேவையில்லை...

toll-suspension-for-all-national-highways-has-been-extended-till-midnight-of-18th-november

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் நவம்பர் 18 வரை சுங்கக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செல்லாத நோட்டு அறிவிப்பால் நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். சில்லறை கிடைக்காமல் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டது. இதையடுத்து சுங்கச்சாவடிகளில் நவம்பர் 14ம் தேதி நள்ளிரவு வரை சுங்கக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், ரூபாய் 500 நோட்டுகள் முழுமையாக புழக்கத்தில் வராதது மற்றும் நூறு, ஐம்பது உள்ளிட்ட நோட்டுகள் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் சுங்கக்கட்டணம் ரத்துக்கான அவகாசத்தை நவம்பர் 18ம் தேதி நள்ளிரவு வரை நீட்டித்து சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close