[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்
  • BREAKING-NEWS வங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்
  • BREAKING-NEWS திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்

நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்யத் தயார்... மேடையில் கண்கலங்கிய பிரதமர் மோடி

pm-narendra-modi-broke-down-during-speech-in-goa-said-left-home-family-for-this-nation

கறுப்புப் பணத்தை பதுக்கியவர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்யவும் தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கோவாவில் விமான நிலைய அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அவர், அதிகாரத்தில் அமர்வதற்காக தாம் பிறக்கவில்லை என்றும் நாட்டு நலனுக்காக தனது வீடு, தனது குடும்பம் என அனைத்தையும் இழந்துள்ளதாகவும் கூறினார். அப்போது பிரதமர் மோடியின் கண்கள் கலங்கியிருந்தன. தவறு செய்திருந்தால் அதற்கான தண்டனையை ஏற்க தயாராக இருப்பதாக குறிப்பிட்ட மோடி, ஊழலற்ற இந்தியாவை உருவாக்க உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்தார். ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் உள்ள பிரச்னையால் மக்கள் அனுபவிக்கும் வலியை தாம் உணர்ந்துள்ளதாகவும் 50 நாட்களுக்கு மட்டும் சிரமங்களை பொறுத்துக் கொண்டு மக்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்‌ என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார். சிறு கொசு கூட அரசின் நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது என்றும் பிரதமர் தெரிவித்தார். கறுப்புப் பணத்தை ஒழிக்க, கடந்த 10 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட ரகசிய நடவடிக்கைகளின் தொடர்ச்சியே கடந்த 8ம் தேதி தாம் வெளியிட்ட அறிவிப்பு என்றார் பிரதமர்மோடி. 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பிற்குப் பின் கறுப்பு பண பதுக்கல்காரர்கள் தூக்கமிழந்து தவிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் செய்தவர்கள் 4 ஆயிரம் ரூபாயை எடுக்க வரிசையில் நிற்க வேண்டிய நிலை வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close