[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் - மழையால் டாஸ் தாமதம்..!
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

பணத்திற்காக விடிய விடிய ஏடிஎம்-கள் முன் காத்திருந்த மக்கள்

delhi-people-in-the-atm-queue-from-last-whole-night-in-mayur-vihar

டெல்லி மக்கள் தங்கள் அன்றாட செலவிற்காக பணம் கிடைக்காமல், விடிய விடிய ஏடிஎம்-கள் முன் தூங்காமல் காத்து நின்றுள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதனையடுத்து, புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் கடந்த 10-ஆம் முதல் வங்கிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு மக்கள் புழக்கத்திற்கு வந்துள்ளன.

புதிய ருபாய் நோட்டுகளை ஏடிஎம்-களில் நிரப்புவதற்கு ஏதுவாக கடந்த 9, 10 ஆகிய இரண்டு தேதிகளில் நாடெங்கும் உள்ள ஏடிஎம்-கள் செயல்படவில்லை. 11-ஆம் தேதி முதல் மீண்டும் ஏடிஎம்-கள் சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தின் பெரும்பாலான ஏடிஎம்-களில் இன்றுவரை பணம் இல்லை. ஒருசில ஏடிஎம்-களில் மட்டும் பணம் கிடைக்கிறது. இதனால் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

தமிழகத்தில் தான் இந்த நாலை என்றால் நாட்டின் தலைநகரான டெல்லியின் நிலை இதைவிட மோசம். அங்கேயும் மக்கள் பணம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். டெல்லியின் பெரும்பாலான இடங்களில் உள்ள ஏடிஎம்-களில் பணம் கிடைக்காத நிலையில், பணம் இருந்த மயூர் விஹார் பகுதியில் உள்ள ஏடிஎம்-கள் முன் விடிய விடிய மக்கள் தூங்காமல் காத்து இருந்துள்ளனர். நேற்று இரவு ஏடிஎம்-கள் முன்பு குவிந்த மக்கள் இன்று காலை வரை அங்கேயே காத்து கிடக்கின்றனர். அன்றாட செலவிற்காக பணம் தேவை இருப்பதால் பணத்திற்காக இரவு முழுவதும் காத்து இருந்ததாக அவர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close