[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

மாணவிகளின் கொண்டை முடியை வலுக்கட்டாயமாக வெட்டிய ஆசிரியர்

govt-teahcers-chops-off-hair-of-seven-girl-students

சத்தீஸ்கரில் மாணவிகளின் கொண்டை முடி நீளமாக இருப்பதாக கூறி வலுக்கட்டாயமாக அதனை வெட்டிய அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் புஷ்பேந்திர பட்டேல். இப்பள்ளியில் 9 மற்றும் 10 வகுப்பு பயிலும் மாணவிகள் 7 பேரின் கொண்டை முடி மிக நீளமாக இருந்துள்ளது. இதனால் கணித ஆசிரியான புஷ்பேந்திர பட்டேல், மாணவிகளின் நீளமாக கொண்டை முடியை வலுக்கட்டாயமாக கத்திரிக்கோல் கொண்டு தானாகவே வெட்டிவிட்டுள்ளார். நீங்கள் பள்ளிக்கு படிக்கத் தான் வருகிறீர்கள் உங்களது நீளமான முடியை மற்றவர்களுக்கு காட்டுவதற்கு அல்ல எனவும் காரமாக பேசியுள்ளனர்.

மாணவிகள் வீட்டிற்கு சென்றதும், தங்களது மகளின் கொண்டை முடி வெட்டப்பட்டதை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக போலீசாரிடம் இதுகுறித்து புகாரும் தெரிவித்தனர். இதனையடுத்து, புஷ்பேந்திர பட்டேலை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், மாணவிகளுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தும் மாணவிகள் தங்களது முடியை வெட்டிக்கொள்ளாததால் தாமாகவே கத்திரிக்கோல் கொண்டு வெட்டியதாக தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close