ஆந்திராவில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாத 3 குழந்தைகள் தனது தந்தையின் இறுதிச் சடங்களில் பங்கேற்க முடியாத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதனால் அன்றயை தினம் மக்கள் தங்கள் கைகளில் பணம் இருந்தும் அதனை மாற்ற முடியாமல் அவதியுற்றனர்.
இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி ஆந்திராவைச் சேர்ந்த கொக்கிலா கார்வயா என்பவர் திடீரென உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவர்களின் 3 குழந்தைகள் ஹைதராபாத்தில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் கூலியாட்களாக வேலை பார்த்துள்ளனர். தந்தை இறந்த சோகத்தை கேட்ட அவர்கள், தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முயற்சித்துள்ளனர். ஆனால் கையில் இருந்த பணம் எல்லாம் 500, 1000 ரூபாய் நோட்டுகளாகவே இருந்ததால் அதனை மாற்ற முடியாமல் தவித்துள்ளனர். முடிவில் அவர்களால் தங்களது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியவில்லை.
இதனையடுத்து, கொக்கிலா கார்வயாவின் மனைவி நாராயணம்மா தங்கள் ஊரில் உள்ள அனைவரிடம் ஓரளவு பணத்தை திரட்டி தனது கணவரின் இறுதிச் சடங்கை முடித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
10 ஆயிரம் பேருடன் போரிட்ட 21 சீக்கியர்கள் ! இந்திய வீரத்தை மெச்சும் "கேசரி" டிரைலர்
புல்வாமா தாக்குதலுக்கு ஐநா பாதுகாப்பு சபை கண்டனம்
திமுக கூட்டணி தொகுதி பங்கீடு: விசிகவுக்கு எத்தனை தொகுதி?
அப்போது எதிரி இப்போது நண்பன் ! திமுக - காங்கிரஸ் கூட்டணி வரலாறு