[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க வீரரை இடித்த விவகாரத்தில் விராட் கோலிக்கு ஐசிசி கண்டனம்
  • BREAKING-NEWS சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு
  • BREAKING-NEWS கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

தொலைக்காட்சிகள் ஆண்டுதோறும் உரிமத்தை புதுப்பிக்க வேண்டியதில்லை: வெங்கய்ய நாயுடு

television-do-not-need-to-renew-license-annually-venkaiah-naidu

தொலைக்காட்சிகள் ஆண்டுதோறும் தங்களது உரிமத்தை புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பொருளாதார பத்திரிகையாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை மாற்றிக்கொள்ளும் நடைமுறை நாடெங்கும் எந்தவித பிரச்னையின்றி சுமூகமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார். அரசின் அறிவிப்பால் மக்கள் கடுமையாக சிரமப்படுவதாக எதிர்க்கட்சிகள் தான் மிகைப்படுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

நீண்ட முன்னேற்பாடுகளுக்கு பிறகே இந்த ரூபாய் மாற்ற‌ அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், அரசின் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை ஒரு சிலரை தவிர அனைவருமே வரவேற்பதாகவும் கூறினார்.

தொலைக்காட்சிகள் ஆண்டுதோறும் தங்களது உரிமத்தை புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்த அமைச்சர், ரூபாய் நோட்டு மாற்றத்தால் மக்கள் படும் சிரமங்களை ஒளிபரப்புவதில் தவறில்லை எனவும் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close