[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

பிரதமர் மோடியின் டுவிட்டர் பக்கத்தை ஒரே நாளில் தவிர்த்த 3.18 லட்சம் பேர்

modi-loses-3-lakh-twitter

பிரதமர் மோடியின் ரூ.500, 1000 குறித்த அறிவிப்பு எதிரொலியால் டுவிட்டர் பக்கத்தில் அவரை பின்தொடர்வரை ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் நிறுத்திக் கொண்டுள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தலைவர்கள் வரவேற்பும் தெரிவித்தனர். அதேசமயம் எதிர்ப்பும் கிளம்பியது.

இந்நிலையில், ரூபாய் நோட்டுகள் மாற்றம் தொடர்பான பிர‌தமரின் அறிவிப்பையடுத்து, அவரது டுவிட்டர் பக்கத்தை பின்தொடர்வதை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் நிறுத்திக் கொண்டுள்ளனர்.

நவம்பர் மாதத்தில் மட்டும் மோடியின் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் சராசரியாக 25,000 அதிகரித்து வந்தது. இந்நிலையில், 500 மற்றும் ஆயிரம் ரூபாய் மாற்றம் குறித்த அறிவிப்பை மோடி வெளியிட்டதைத் தொடர்ந்து, ஒரே நாளில் 3 லட்சத்து 18 ஆயிரம் பேர், டுவிட்டரில் அவரை பின்தொடர்வதை தவிர்த்துள்ளனர். இருப்பினும் 2 கோடியே 38 லட்சம் பேர் மோடியை தற்போதும் பின்தொடர்கின்றனர்.

பிரதமர் மோடிக்கு அடுத்ததாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் டிவிட்டர் பக்கத்தை 2 கோடியை 33 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close