[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா
  • BREAKING-NEWS 8 நிமிட சண்டைக் காட்சிக்கு ரூ.70 கோடி: பிரபாஸின் ’சாஹோ’ தயாரிப்பாளர் தாராளம்
  • BREAKING-NEWS ஒருவரையொருவர் கன்னத்தில் அறைந்து கொள்ளும் விநோத போட்டி
  • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS “மாநிலங்களவைக்கு வைகோ செல்வது இந்து கலாச்சாரத்தை சீர்குலைக்கும்” - சுப்ரமணியன் சுவாமி

எந்தவித கட்டணமுமின்றி அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் பணம் எடுக்கலாம்...

no-surcharge-on-atm-use-amid-rush-for-new-notes

இரண்டு நாட்களுக்குப் பின் வங்கி ஏடிஎம்கள் நாளை முதல் செயல்பட உள்ளன.

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. முதல்நாளான இன்று நாடு முழுவதும் வங்கிகள், அஞ்சலகங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கூட்டத்தை ஒழுங்குபடுத்த கூடுதல் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டிய சூழ்நிலை பெரும்பாலான வங்கிகளுக்கு ஏற்பட்டது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை அடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை நிரப்புவதற்காகவும், ஏற்கனவே நிரப்பப்பட்டிருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப எடுப்பதற்காகவும் அனைத்து ஏடிஎம்களும் 2 நாட்கள் மூடப்பட்டன. அவ்வாறு மூடப்பட்ட ஏடிஎம்கள் நாளை முதல் செயல்பட உள்ளது. இந்தநிலையில் வங்கிகளில் கூட்டத்தைக் குறைக்கும் வகையிலும், ஏடிஎம் மையங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கிலும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்காக விதிக்கப்படும் கூடுதல் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close