தனியார் நிறுவனத்தின் விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் வெளியாவதன் பின்னணி என்ன என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த பிரதமரின் முடிவு தைரியமானது என்று கூறி, பேடிஎம் (PAYTM) என்ற நிறுவனம், ஆங்கில நாளிதழ்களில் இன்று முழு பக்க விளம்பரம் கொடுத்திருக்கிறது. இதை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், இது மிகவும் வெட்கக்கேடானது என்று கூறியுள்ளார். தனியார் நிறுவனத்தின் விளம்பரத்தில் மோடி எப்படி மாடலாக இடம்பெற முடியும் என்றும் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இதுபோன்ற நிறுவனங்கள் தவறிழைத்தால் அவர்களின் மீது யார் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கெஜ்ரிவால் வினா எழுப்பியுள்ளார்.
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!
வாய்ஸ் காலிங் வசதியில் புதிய அப்டேட் கொடுத்த வாட்ஸ் அப்!
செங்கல் இன்றி நீங்கள் விரும்பிய பட்ஜெட்டில் கான்கிரீட் வீடுகள்... அது எப்படி..?
துருப்பிடித்து ஓட்டை உடைசலாக மதுராந்தகம் ஏரி ஷட்டர்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு..?