[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

உ.பி.யில் குவியல் குவியலாக எரிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள்

sacks-full-of-burnt-500-and-1-000-rupee-notes-in-uttar-pradesh

உத்திர பிரதேச மாநிலம் பேரில்லி நகரில் எரிந்த நிலையில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை கருப்புப்பணப் பதுக்கல்காரர்களால் எரிக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டார். இதனையடுத்து புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் இன்று முதல் வங்கிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு மக்கள் புழக்கத்திற்கு வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலம் பேரில்லி நகரில் உள்ள பர்ஷா கேத சாலையில், மூட்டைகளில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை கருப்புப்பணப் பதுக்கல்காரர்களால் எரிக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து பேரில்லி நகரின் தலைமை காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், ‘500, 1000 ரூபாய் நோட்டுகள் பாதி கிழிந்து எரிந்த நிலையில் கிடைத்துள்ளது. இது பற்றி ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். மேலும் எரிந்த நோட்டுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close