[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யபப்டுவதும் இந்தாண்டு அதிகரித்துள்ளது - வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு சோனியா காந்தி ஒப்புதல் எனத் தகவல்
  • BREAKING-NEWS என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி; ‘ICON OF GOLDEN JUBILEE' விருது பெற்றதில் மகிழ்ச்சி - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS கோவாவில் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு ‘ICON OF GOLDEN JUBILEE' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது ராஜினாமா கடிதத்தை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு அனுப்பினார்
  • BREAKING-NEWS மாமல்லபுரத்தில் இந்திய கலாசார விழா நடத்துவதற்காக ரூ.75 லட்சம் ஒதுக்கி அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணியே தொடரும்; அரசியலில் எதுவும் நடக்கலாம் - துணை முதல்வர் ஓபிஎஸ்

புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன

new-500-and-2000-rupee-notes-distribute-from-today

நாடு முழுவதும்பு திய 2 ஆயிரம் நோட்டுகள் வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் இன்று விநியோகிகப்பட்டு வருகின்றன. பழைய 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ‌செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பதிலாக புதிய நோட்டுகள் விநியோகிக்கப்படுகின்றன.

தற்போது புழக்கத்தில் இருக்கும் 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கி மற்றும் அஞ்சலகங்களில் இன்று முதல் டிசம்பர் 30ம் தேதி வரை உச்சவரம்பின்றி டெபாசிட் செய்யலாம்.

வங்கிகளி‌ல் பணம் செலுத்தும்போது அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து தருவதுடன் ஆதார், பான் எண் போன்ற ஏதாவது ஒரு அடையாள ஆவண எண்ணையும் குறிப்பிடவேண்டும்.

4 ஆயிரம் ரூபாய் வரையிலான கையிருப்புத் தொகையை வங்கி மற்றும் அஞ்சலகங்களில் நேரடியாக சென்று மாற்றிக்கொள்ளலாம். 15 நாட்களுக்குப் பிறகு இந்த வரம்பு மாற்றி அமைக்கப்படும்.

பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எடுத்துவிட்டு புதிதாக வைப்பதற்காக இன்றும் ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளன.

ஏ.டி.எம் மூலம் வரும் 18ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு அதிகபட்சத் தொகையாக 2 ஆயிரம் ரூபாய் மட்டும் எடுக்க முடியும். அதற்கு பிறகு 4 ஆயிரமா‌க அந்த வரம்பு உயர்த்தப்படும்.

நேரடி பணப்பரிவர்த்தனை இல்லாத செக், டிடி, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஆன் லைன் பணம் வர்த்தகம் ஆகியவற்றை எப்போதும் போல் மேற்கொள்ளலாம். அதற்கு தடையும், கட்டுப்பாடும் இல்லை.

அரசு மருத்துவ‌னைகள், ரயில் நிலையங்கள், பெட்ரோல் பங்குகள், அரசு பால் மையங்கள் ஆகிய இடங்களில் வரும் 11ம் தேதி வரை 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close