[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிராக வழக்கு

pil-filed-aganist-scrapping-rs500-and-rs1000-currency-note

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குத் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் நவம்பர் 8 முதல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கருப்புப்பணம் மீதான துல்லியத் தாக்குதல் என்று வர்ணிக்கப்படும் இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பழைய ரூபாய் நோட்டுகளை நவம்பர் 10 முதல் டிசம்பர் 30 வரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு தடை விதிக்குமாறு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சங்கம்லால் பாண்டே என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில், பொதுமக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் இந்த அறிவிப்பினைத் திரும்பப் பெற வேண்டும் என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close