[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற ட்ரம்ப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

narendra-modi-congratulates-us-presidential-elect-trump-on-twitter

அமெரிக்காவின் அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் ட்ரம்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விறுவிறுப்பாக நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரியைத் தோற்கடித்து குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்ப் வெற்றி பெற்றார்.வெற்றிபெற்ற ட்ரம்ப்-புக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவின் 45-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டமைக்கு வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா-இந்தியா இடையேயான உறவை புதிய உச்சத்திற்கு கொண்டுசெல்ல ட்ரம்ப்புடன் இணைந்துபணியாற்ற விரும்புவதாகவும் மோடி தெரிவித்துளார். மேலும், பரப்புரையின்போது இந்தியாவை நட்புநாடாக கருதி ட்ரம்ப் பேசியதை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்வதாகவும் மோடி குறிப்பிட்டிருக்கிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close