[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

டெல்லியில் காற்று மாசு: இணையதளத்தில் முகமூடி விற்பனை ஜோர்

air-pollution-in-delhi-sale-of-air-purifiers-and-masks-soars-as-delhi

டெல்லியில் மாசு காற்று, பனிப்புகை ஆகியவற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள முகமூடி, காற்று சுத்திகரிப்பு கருவி ஆகியவற்றை இணையதளத்தில் பதிவு செய்து வாங்குவது அதிகரித்துள்ளது.

டெல்லி நகரத்தை அடர்த்தியான தூசு போர்வை போர்த்தியது போல் சூழ்ந்துள்ளது.மக்கள் தங்களை மாசு காற்று, பனிப்புகை ஆகியவற்றில் இருந்து காக்க முகமூடி, காற்று சுத்திகரிப்பு கருவி ஆகியவற்றை இணையதளத்தில் பதிவு செய்து வாங்குவது அதிகரித்துள்ளது

இதற்காக இணையதள வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் ஸ்னாப்டீல், பிளிப்கார்ட், அமேசான் ஆகியவற்றை மக்கள் நாடி வருகின்றனர். இந்த விற்பனை தீபாவளிக்கு பிறகு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகமூடி விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது,3 மடங்கு அதிகரித்துள்ளதாக ஸ்னாப்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது. தீபாவளிக்கு முன்பு, தீபாவளிக்கு பின்பு என இரண்டுக்கும் இடையே 7மடங்கு வரை காற்று சுத்திகரிப்பு மற்றும் முகமூடி விற்பனை அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபோல, அமேசான், பிளிப்கார்ட் இணையதள நிறுவனங்களிலும் முகமூடி, காற்று சுத்திகரிப்பு விற்பனை பல மடங்கு உயர்ந்துள்ளது. டெல்லியில் காற்று மாசாடைந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில், இணையதள விற்பனை ஜோராக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close