[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன
  • BREAKING-NEWS ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்தார்
  • BREAKING-NEWS கேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: 4 மணி நேரத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக தகவல்
  • BREAKING-NEWS கோவாவில் மிக் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் இருவரும் பாதுகாப்பாக தப்பினர்
  • BREAKING-NEWS கனமழை காரணமாக நெல்லை நடுவக்குறிச்சி குளக்கரையில் பல இடங்களில் உடைப்பு

சியாச்சின் பனிச்சரிவில் உயிரிழந்த ஹனுமந்தப்பா உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி

political-leaders-tribute-to-hanumanthappa-body

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்டிருந்த ராணுவ வீரர் ஹனுமந்தப்பா நேற்று காலை 11.45 மணியளவில் உயிரிழந்தார். நிமோனியா, ரத்தக் கட்டு, பல்வேறு உட‌லுறுப்புகள் செயலிழப்பு என மிகமோசமான உடல்நிலையுடன் கொண்டுவரப்பட்ட ஹனுமந்தப்பாவை காப்பாற்ற டெல்லி ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் 2 நாட்களாக போராடினர். காஷ்மீர் மாநிலம் சியாச்சினில்‌ கடந்த 3ம் தேதி ஏற்பட்ட பனிச்சரிவில் ஹனுமந்தப்பா உள்ளிட்ட 10 ராணுவ வீரர்கள் சிக்கினர். இதில் மற்ற 9 வீரர்கள் உயிரிழந்த நிலையில் ஹனுமந்தப்பா மட்டும் உயிருடன் மீட்கப்பட்டிருந்தார். இதற்கிடையே, எஞ்சிய 9 பேரின் உடல்களை, சியாச்சில் மலைப்பகுதியிலிருந்து கீழே கொண்டு வர முடியாத அளவிற்கு, சீதோஷ்ண நிலை மிகவும் மோசமாக உள்ளதாக ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில்,மரு‌த்துவ சிகிச்சை பலனளிக்காமல், டெல்லி ராணுவ மருத்துமவனையில் உயிரிழந்த வீரர் அனுமந்தப்பாவின் உடலுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்கர்‌, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் உள்‌ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து கர்நாடகா கொண்டு செல்லப்பட்ட ஹனுமந்தப்பாவின் உடல், ஹூப்லி மருத்துவ ஆய்வு மையத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close