[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்கிம்மர் கருவி மூலம் சென்னை ஏடிஎம்களில் திருட்டு - பல்கேரிய கும்பல் கைது
  • BREAKING-NEWS சிகிச்சைக்குப் பின் ‘மாட்டிறைச்சி சர்ச்சை இளைஞர்’ முகமது பைசான் கைது
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளிலிருந்து காவிரிக்கு விநாடிக்கு 8,300 கன அடி நீர் திறப்பு

சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கத் தயார்.. கேரளா அரசு

women-can-go-inside-sabarimala-temple-say-kerala-government

சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கத் தயார் என உச்சநீதிமன்றத்தில் கேரளா அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை கோயிலுக்குள் தற்போது 10 வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்கும், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. எனவே சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வகையான பெண்களை அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின் போது கேரள அரசும், கோயில் தேவஸ்தானமும் கூறியதில், காலம்காலமாக பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியத்தை தகர்த்து அனைத்து வகையான பெண்களையும் அனுமதிக்க முடியாது என தெரிவித்திருந்தது. அப்போது கேள்வி எழுப்பிய நீதிபதிகள் குழந்தை திருமணம் கூட முந்தைய காலத்தில் பின்பற்றப்பட்டு வந்தது தான். ஆனால் தற்போது அது சமூகத்திற்கு ஒவ்வாமை என்பதால் அதற்கு தடை விதிக்கவில்லையா? என கேள்வி எழுப்பினர். மேலும், பாரம்பரியம் என்ற ஒரே காரணத்தை மட்டும் கூறி பெண்களை அனுமதிக்க மறுப்பது எந்தவிதத்தில் நியாயம் எனவும் வினா எழுப்பியிருந்தனர்.

கடந்த மே மாதம் கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முதலமைச்சர் உம்மண் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அகற்றப்பட்டு இடதுசாரிகள் தலைமையில் பினராயி விஜயனின் ஆட்சி அரியணையில் ஏறியது. இந்நிலையில் இன்றைய உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையின் போது பதில் மனு தாக்கல் செய்த கேரள அரசு, சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதிற்குட்பட்ட பெண்களையும் அனுமதிக்கத் தயார் என தெரிவித்தது. இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை வரும் 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

காங்கிரஸ் அரசுக்கு முந்தை‌ய அச்சுதானந்தன் அரசின் நிலைப்பாட்டையே தற்போதைய பினராயி விஜயனின் அரசும் பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close