[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

வெளிநாட்டு நிதியுதவியை இழக்கும் 25 என்ஜிஓக்கள்

anti-national-acts-25-ngos-lose-foreign-fund-licences

அந்நிய நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், 25 என்ஜிஓக்களின் பதிவைப் புதுப்பிக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

அவற்றின் செயல்பாடுகள் தேசிய நலனுக்கு உகந்ததாக இல்லை என்பதன் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அந்நிய நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ் தங்களது என்ஜிஓக்களை ஜூன் 30ம் தேதிக்குள் பதிவு செய்யும்படி என்ஜிஓக்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், 11 ஆயிரத்து 319 என்ஜிஓக்கள் தங்களது பெயரை பதிவு செய்யவில்லை.

இதையடுத்து அவற்றின் அங்கீகாரம் கடந்த 1ம் தேதியுடன் முடிந்து விட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், ஆயிரத்து 736 என்ஜிஓக்கள் ஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை அல்லது போதிய ஆவணங்களை அளிக்கவில்லை என்று கூறி, அவற்றிற்கு வரும் 8ம் தேதிக்குள் விளக்கமளிக்கும்படி கோரப்பட்டுள்ளது.

இதனிடையே, செயல்பாடுகள் தேசிய நலனுக்கு உகந்ததாக இல்லை என்ற காரணத்தால், பதிவை புதுப்பிக்க மறுக்கப்பட்டுள்ள 25 என்ஜிஓக்கள் எவை என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. ஆனால், பதிவைப் புதுப்பிக்க விண்ணப்பிக்காததால், பதிவு ரத்து செய்யப்பட்ட 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட என்ஜிஓக்களின் பட்டியலில் பெரும் என்ஜிஓக்கள் உள்ளன. ஆக்ஸ்ஃபேம் இந்தியா ட்ரஸ்ட், அதானி பவுண்டேஷன், இந்திரா காந்தி தேசிய கலைகள் மையம், சஞ்சய் காந்தி மெமோரியல் ட்ரஸ்ட், இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகம் மற்றும் சென்னையிலுள்ள லயோலா கல்லூரி சொசைட்டி உள்ளிட்டவை இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த வகையில் வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெறும் என்ஜிஓக்களின் எண்ணிக்கை 33,158-லிருந்து சுமார் 20 ஆயிரமாக குறைந்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close