[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன
  • BREAKING-NEWS ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்தார்
  • BREAKING-NEWS கேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: 4 மணி நேரத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக தகவல்
  • BREAKING-NEWS கோவாவில் மிக் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் இருவரும் பாதுகாப்பாக தப்பினர்
  • BREAKING-NEWS கனமழை காரணமாக நெல்லை நடுவக்குறிச்சி குளக்கரையில் பல இடங்களில் உடைப்பு

முடிவுக்கு வந்தது பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போராட்டம்

petrol-pump-owners-postpone-their-protest

கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க எண்ணெய் நிறுவனங்களுடன் ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

சில்லறை விற்பனையாளர்களுக்கு பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 1.21 காசுகளும், டீசல் ஒரு லிட்டருக்கு 77 காசுகளும் வழங்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு பரிந்துரைத்திருந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக உயர்த்தப்படாத கமிஷன் தொகையை உயர்த்த வேண்டுமென பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இதனை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்காததை தொடர்ந்து, அவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் பிரதிநிதிகளுடன், எண்ணெய் நிறுவனங்கள் மும்பையில் பேச்சுவார்த்தை நடத்தின. இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close