[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

ராணுவத்திற்கு சொத்துக்களை எழுதி வைத்த 73 வயது நபர்

73-year-old-man-written-his-welfare-in-military-assets-and-the-general

மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த விவசாயத் துறை நிபுணர் ஒருவர் ‌தனது சொத்துக்களை ராணுவத்திற்காகவும் பொது நலனுக்காகவும் உயில் எழுதித் தந்துள்ளார்.

பிரகாஷ் கேல்கர் என்ற 73 வயது நபர், தனது சொத்துக்களில் பிரதமர் மற்றும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக தலா 30 சதவிகிதத்தையும், ராணுவத்தினருக்காக 30 சதவிகிதத்தையும் தொண்டு நிறுவனங்களுக்கு 10 சதவிகிதம் என பிரித்து தருவதாக தெரிவித்துள்ளார்.

தனது சொத்துகள் அனைத்தும் ராணுவத்தினருக்கும் விவசாயிகளுக்கும்‌ இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் செல்ல வேண்டும் என்பது தனது விருப்பம் என கேல்கர் தெரிவித்தார். பிரகாஷ் கேல்கர் பல்வேறு பன்னாட்டு விவசாய நிறுவனங்களுக்கு பருத்தி தொடர்பான ஆலோசனைகளை அளித்து வந்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close