[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

ஒரே மேடையில் அகிலேஷ், ஷிவ்பால், முலாயம் சிங் யாதவ்.. சரிந்த செல்வாக்கை மீட்க அரசியல் முயற்சி

mulayam-yadav-shivpal-yadav-send-samajwadi-party-unity-message-at-akhilesh-s-rath-yatra

உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தனது தேர்தல் பரப்புரையை இன்று தொடங்கினார். சமாஜ்வாதி கட்சியில் ‌அகிலேஷ் யாதவ், ஷிவ்பால் யாதவ் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், இன்று இருவரும் ஒரே மேடையில் கலந்து கொண்டனர்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதுள்ள முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்-விற்கும் அவரது சித்தப்பாவான கட்சியின் மாநில தலைவர் ஷிவ்பால் யாதவ்-விற்கும் இடையே கடும் மோதல் இருந்து வந்ததால் கட்சியில் பிளவு ஏற்படும் நிலை ஏற்பட்டது.

ஆனால் அகிலேஷ் யாதவ்-விற்கும் ஷிவ்பால் யாதவ்விற்கும் இடையே சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அகிலேஷ் யாதவ்வின் தந்தையான முலாயம் சிங் யாதவ் ஈடுபட்டார். கட்சியில் ஒருவேளை பிளவு ஏற்பட்டால் அது வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த அவர் இத்தகைய சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் அகிலேஷ் யாதவ் தனது தேர்தல் பரப்புரையை இன்று தொடங்கினார். இதற்கான விழா லக்னோவில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் அகிலேஷ் யாதவ், முலாயம்சிங் யாதவ் , ஷிவ்பால் ஆகியோர் ஒரே மேடையில் அமர்ந்து கலந்து கொண்டனர். முன்னர் எவ்வளவு தான் மோதல் இருந்தாலும் தற்போது அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவர்கள் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர்.

பின்னர் பரப்புரையை ஷிவ்பால் முன்னிலையில் முலாயம்சிங் யாதவ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஷிவ்பால் யாதவ் பேசுகையில், ‘அகிலேஷின் பரப்புரை வெற்றி அடைய வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.

ரத யாத்திரைக்காக தயாரிக்கப்பட்ட சொகுசுப் பேருந்தில் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறினார். இதனிடையே, யாத்திரை தொடங்கிய ஒரு கிலோ மீட்டர் பயணத்திலேயே சொகுசுப் பேருந்து பழுதடைந்து நின்றதால், அகிலேஷ் யாதவ் அங்கிருந்து தனது அலுவலக காரில் சென்று பரப்புரையை தொடர நேர்ந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close