[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்
  • BREAKING-NEWS தென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது

அகிலேஷ் யாதவ்வின் 'விகாஸ்யாத்ரா' பேருந்தில் அப்படி என்னதான் இருக்கிறது?!

akhilesh-yadav-s-rath-is-a-mercedes-bus-with-world-class-interiors-see-what-is-inside

உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி மக்களை சந்திக்க சகல வசதிகளும் கூடிய வண்ணமயமான பேருந்தில் அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் யாத்ரையை தொடங்கியுள்ளார்.

‘விகாஸ்யாத்ரா’ என்ற பெயரில் மாபெரும் ரத யாத்திரையாக தொடங்கப்பட்டுள்ள இந்த யாத்திரையில் ஒரு சிவப்பு நிற பேருந்துக்குள் இருந்து அவர் மக்களை சந்திக்கின்றார். இந்த பேருந்து சுமார் 35 அடி நீளமும் 15 அடி உயரமும் கொண்டுள்ளது. வை-பை வசதி, 4-ஜி வசதி, தொலைபேசி இணைப்பு, ஒரு சிறிய கழிவறை, சிறிய சமையலறை, பேருந்தின் மேலே பார்வையாளர்களை காண ஒரு கூரை, குண்டு துளைக்காத கண்ணாடி என சகல வசதிகளுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து வசதிகளுடனும் கூடிய அந்த பேருந்தில் முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் போன்றோரின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் அந்த பேருந்தில் பச்சை வண்ண மரங்கள், உழவர்களின் புகைப்படங்கள், கோலங்கள், மாடு, புல், வீடுகள், முகப்பில் ஒலிம்பிக்ஜோதி விளக்கு, பறவைகள், நெற்கதிர்கள் என ஒரு கிராமமத்தின் சாயலை வெளிப்படுத்தும் விதமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. சைக்கிளில் அவர் உலா வரும் புகைப்படமும் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த பேருந்தின் மதிப்பு சுமார் 5 கோடி என்று கூறப்படுகிறது. இந்த யாத்திரை லக்னோவில் தொடங்கி கான்பூரில் முடிவடைகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close