[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை மூலம் சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த அரசு முயன்றுள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கு மறைமுகமாக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது - கே.எஸ்.அழகிரி
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் என்பது சட்டத்திற்கு உட்பட்டதே; மறைமுகத் தேர்தலுக்கு அவசரச் சட்டம் பிறப்பித்தது வியூகம் என்பது அல்ல - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS எங்களுடைய செயல்பாட்டை ஏற்றுக்கொண்டு பாஜக கூட்டணிக்கு ரஜினியும், கமலும் வரலாம் - பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்தது தமிழக அரசு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யபப்டுவதும் இந்தாண்டு அதிகரித்துள்ளது - வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு சோனியா காந்தி ஒப்புதல் எனத் தகவல்

வைரஸ் காய்ச்சலால் 73 பேர் உயிரிழப்பு....காப்பாற்றுமாறு பிரதமருக்கு சிறுவன் கடிதம்

odisha-tribal-boy-writes-to-pm-about-encephalitis-fever

ஒடிசாவில் பரவிவரும் மூளைக்காய்ச்சலைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு 10 வயது சிறுவன் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் மல்காங்கிரி மாவட்டத்தில் உள்ள 505 கிராமங்களில் என்சிபாலிட்டிஸ் என்ற வைரஸால் ஏற்படும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் பரவி வருகிறது. குழந்தைகளையே அதிகம் பாதிக்கும் இந்த காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 73 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல் சோர்வு போன்றவற்றின் மூலம் இந்த நோய் தொற்றை தெரிந்துகொள்ளலாம்.

இந்தநிலையில், மூளைக் காய்ச்சலைத் தடுத்து உயிர்களைக் காப்பாற்றுமாறு போல்கண்டா தொடக்கப்பள்ளியில் 4ஆம் வகுப்புப் பயிலும் உமேஷ் மாதி எனும் 10 வயது சிறுவன் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த சிறுவன் எழுதியுள்ள கடிதத்தில், இந்த ஜப்பானிய காய்ச்சலால் தனது நண்பர்கள் பலர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பல்வேறு வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நீங்கள், எங்கள் ஊருக்கு வந்து குழந்தைகளின் நிலையை நேரில் கண்டறிய வேண்டும் என்று உருக்கத்துடன் அந்த சிறுவன் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close