ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 14 மாதக்குழந்தை படுகாயம் அடைந்துள்ளது.
சம்பா மாவட்டத்தின் ராம்கர்க் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் கையெறி குண்டுகள் உள்ளிட்டவைகளால் தாக்குதல் நடத்தியது. இதில், அந்த பகுதியில் வசித்து வரும் பலரது வீடுகள் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் அப்பகுதியில் வசித்துவந்த 8 பேர் உயிரிழந்தனர். மேலும், பாரி எனும் 14 வயதுக் குழந்தை உள்ளிட்ட 14 பேர் படுகாயம் அடைந்தனர். குறிப்பாக குழந்தை பாரிக்கு கழுத்து மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்த குழந்தைக்கு இன்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த குழந்தை உடல்நலம் தேற நீண்டநாட்கள் பிடிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திவரும் தாக்குதல்களைத் தொடர்ந்து எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் இருக்கும் 400 பள்ளிகளை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.