[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

நெல்லித்தோப்பில் நாராயணசாமிக்கு எதிராக அணி திரளும் பிரதான கட்சிகள்..

parties-join-to-defeat-narayanasamy-in-puducherry-bye-election

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக-விற்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது பாரதிய ஜனதா கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. எனவே காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான நாராயணசாமிக்கு அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர் மிகப் பெரிய சவாலாக இருப்பார் எனத் தெரிகிறது.

நடந்து முடிந்த புதுச்சேரி சட்டப்பேரவை தொகுதியில் மொத்தம் உள்ள 30 இடங்களில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 17 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து முன்னாள் மத்திய இணையமைச்சர் நாராயணசாமி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே, 6 மாதத்திற்குள் அவர் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால், நாராயணசாமி போட்டியிடுவதற்கு ஏதுவாக, நெல்லித்தோப்பு எம்எல்ஏ ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் தொடர்ச்சியாக 19-ம் தேதி நெல்லித்தோப்பு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும், புதுச்சேரி முதலமைச்சரான நாராயணசாமி வெற்றி பெற்றால் மட்டுமே முதலமைச்சராக தனது பதவியை தொடர முடியும். இல்லையென்றால் அவரின் முதலமைச்சர் பதவி பறிபோகும். எனவே அவரை வீழ்த்த பல்வேறு கட்சிகளும் வியூகங்களை வகுத்து வருகின்றன.

புதுச்சேரியில் முக்கிய கட்சியாக கருதப்படும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி, அதிமுக வேட்பாளரான ஓம்சக்தி சேகருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நாராயணசாமியை தோற்கடிப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், நாராயணசாமிக்கு எதிராக இடைத்தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளதாகவும் இன்று காலை அவர் அறிவித்தார்.

இதனிடையே, தற்போது புதுச்சேரி பாஜக-வும் அதிமுக வேட்பாளருக்கே ஆதரவு தெரிவித்துள்ளது. ஏற்கனவே நேற்று புதுச்சேரி பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி இன்று அதிமுக-விற்கு ஆதரவு தெரிவித்துள்ள காரணத்தினால் தற்போது, பாஜக-வும் அதிமுக வேட்பாளருக்கே ஆதரவு கொடுத்துள்ளது.

எனவே தற்போது புதுச்சேரி இடைத் தேர்தலில் ஓம்சக்தி சேகரின் கை சற்று ஓங்கி உள்ளது. இதேபோல், நாராயணசாமிக்கும் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் ஆதரவு இருப்பதால் இடைத்தேர்தலில் களம் விறு விறுப்படைந்துள்ளது நன்றாக தெரிகிறது. யார் வெற்றி பெறுவார் என்பது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான நவம்பர் 22-ஆம் தேதியே தெரியவரும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close